இவ்வளவு சிறிய நாகப் பாம்பா... இணையத்தில் வியூஸ்களை குவிக்கும் வீடியோ
பாம்புகள் தொடர்பான பல வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், அதே சமயம் பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் உள்ளது.

பொதுவாக கொடுரமான உயிரினங்கள் உட்பட அனைத்து உயிரினங்களிலும் உள்ள குட்டிகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். அவற்றை பார்க்கும் பலருக்கும் உடனடியாக மனதில் தோன்றும் விஷயம் அவற்றை செல்லமாக வளர்க்கலாமே என்ற ஆசை எழும். சமீபத்தில் வைரலான வீடியோவில், ஒரு நபர் குட்டி நாகப்பாம்பு ஒன்றுடன், பொம்மையோடு விளையாடுவதை போலான காட்சிகளை காண முடிகிறது. இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குழந்தையாக இருந்தாலும் பாம்பு பாம்புதான் என்றும் சிலர் கமெண்ட்டில் கூறியுள்ளனர்.சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோவில் பாம்பு குட்டியை ஒரு நபர் தொட்டு தொட்டு விளையாடுகிறார். எனினும் வீடியோவின் தொடக்கத்தில் ஒருவேளை இது போலி பாம்போ என்பது போல் தோன்றினாலும் சில நொடிகள் வீடியோ பிளேயான பிறகு அது பொம்மை அல்ல உயிருள்ள உண்மையான குட்டி பாம்பு என்பது தெளிவாகிறது.
கிட்டத்தட்ட வீடியோவில் உள்ள நபர் அந்த குட்டி நாகப்பாம்பை செல்லம் கொஞ்சுவதை பார்க்க முடிகிறது. இந்த காட்சி பல நெட்டிசன்களை நெகிழ செய்து கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. குட்டி நாகப்பாம்பை அந்த நபர் மெதுவாக தொடும் போது மற்றும் கையால் அதை தூக்க முயற்சிக்கும் பொது குட்டி பாம்பு அதன் பிளவுபட்ட நாக்கை வெளியே நீட்டிக் கொண்டு சீறுகிறது. ஆனால் அந்த நபரை அதை கடிக்கவில்லை. ஒருவழியாக குட்டி பாம்பை அந்த நபர் கைகளில் தூக்கி பாசமாக தடவி கொடுப்பதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது
நபர் ஒருவர் தனது கைகளால் பாம்பு குட்டியை அரவணைக்கும் மேற்கண்ட காட்சிகள் மிகவும் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ @world_of_snakes_ என்ற இன்ஸ்டா அக்கவுண்ட் மூலம் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோ 1.4 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும், 62.3 ஆயிரத்திற்கும் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்து சிலர் நெகிழ்ந்து போனாலும் பல யூஸர்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். பல வகையான ரியாக்ஷன்களையும் கொடுத்துள்ளனர்.
ஒரு யூஸர் “ஒரு பெரிய நாகப்பாம்பு எவ்வளவு ஆபத்தானதோ, அதன் குடியும் அதே அளவிற்கு ஆபத்தானது. ஒருமுறை நாகப்பாம்பு கடித்தால் வாழ்க்கையே அழிந்துவிடும். சிறிய நாகபாம்புகளுக்கும் விஷம் இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு அதிர்ச்சியடைந்த யூஸர், ‘இது பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் ஆபத்தான செயல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு யூஸர், இது உண்மையில் மிகவும் ஆபத்தானது, குட்டி பாம்புகளுக்கு கடிக்கும்போது எவ்வளவு விஷம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரியாது. எனவே ஒருவேளை அவை கடித்தால் வளர்ந்த பாம்பு கடிப்பதை விட மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம்" என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு யூசரோ “குட்டியாக இருக்கும் போதே நாகப்பாம்புடன் பழகுவது ஒரு பிணைப்பை உருவாக்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். அது பெரிதாக வளர்ந்தாலும் கூட குறிப்பிட்ட நபரால் அச்சுறுத்தல் இல்லை என்பதை அறிந்து அவரை தன்னை தொட அலல்து கையாள அனுமதிக்கும் என்று நான் நினைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment